சொத்து குவிப்பு வழக்கில் சிக்கினார் சச்சின் டெண்டுல்கர்

அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், சினிமா நடிகர்கள், தொழிலதிபர்கள் என பலரும், பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை வெளிநாடுகளில் சட்டவிரோதமாக வாங்கியுள்ளதாக சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு (ICIJ) பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு பனமா பேப்பர் வெளியாகி உலகளவில் ஒரு சர்ச்சையை கிளப்பியது. அதேபோல தற்போது வெளியிடப்பட்டிருக்கும் பண்டோரா பேப்பரும் ஒரு மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.2016-ம் ஆண்டு வெளியிட்ட பட்டியலில் பிரபல இந்தி நடிகர் அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், மற்றும் தொழிலதிபரான கெளதம் ஆதானியின் மூத்த சகோதரர் வினோத் அதானி, டி.எல்.எப் நிறுவன தலைவரான கே.பி. சிங் ஆகியோர் அந்த பட்டியலில் இருந்தனர்.

இந்நிலையில், இப்போது பண்டோரா பேப்பர் என்ன பெயரில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த பட்டியலில் புகழ் பெற்ற இந்திய கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர் பெயரும் இருக்கிறது. அவரை தொடர்ந்து தொழில் அதிபர்களான நீரவ் மோடி, அனில் அம்பானி உட்பட மொத்தம் 380 இந்திய பெயர்கள் அந்த பட்டியலில் இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
மேலும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், கென்யா ஜனாதிபதி உஹுரு, செக் குடியரசு பிரதமர் ஆண்ட்ரேஸ் பாபிஸ், ஜோர்டான் மன்னர் அப்துல்லா, பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் மற்றும் பாப் இசை பாடகி ஷகிரா, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் என பலரின் பெயரும் வெளிவந்துள்ளது.
14 கார்ப்பரேட் நிறுவனங்களிருந்து கசிந்த 1.94 கோடி மதிப்புள்ள இந்த ஆவணத்தை சுமார் 600 பத்திரிகையாளர்கள் ஆய்வு செய்து “பண்டோரா பேப்பர்” என்ற பெயரில் வெளியிட்டுள்ளது. வெளியாகியிருக்கும் இந்த ஆவணம் வரி ஏய்ப்பு செய்தவர்களை பகிரங்கமாக காட்டி கொடுத்துள்ளது.
கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர் பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகளில் சட்டவிரோதமாக முதலீடு செய்து நிறுவனம் ஒன்றை தொடங்கி, பணமா பேப்பர் வெளிவந்த 3 மாதங்கள் கழித்து மீண்டும் அந்த நிறுவனத்தை மூடி விட்டதாகவும் தகவல் கிடைத்துள்ளது.