மீரா மிதுனின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

மாடல் அழகியாக இருந்து தமிழ் திரையுலகில் தனக்கான தடம் பதித்தவர் மீரா மிதுன். ஆனால் அண்மையில் நடைபெறும் சம்பவங்கள் மீரா மிதுன் என்றாலே சர்ச்சைதான் என்ற எண்ணத்தை கொடுத்துள்ளது.
இதற்கு காரணம் சில நாட்களுக்கு முன்பு பட்டியல் இனத்தவர் குறித்து மீரா மிதுன் அவதூறாக பேசியதே ஆகும். மீரா மிதுனின் இந்த சர்ச்சை பேச்சால் அவர் மீது 7 பிரிவுகளில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இவருக்கு உடந்தையாக இருந்த காரணத்தினால் அவரது நண்பர் ஷாம் அபிஷேக் அவர்களும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், பட்டியலின பிரிவு மக்கள் பற்றி அவதூறாக பேசிய வழக்கில் கைதான மீரா மிதுனின் நீதிமன்ற காவல் வருகிற செப்டம்பர் 9-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அவரது நண்பர் ஷாம் அபிஷேக்கின் நீதிமன்ற காவலையும் நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது.