கொரோனா தடுப்பூசி தொற்றை தடுப்பதற்கு அல்ல… மத்திய அரசு அறிவிப்பு!

நாடு முழுவதும் கடந்த இரு நாட்களில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக கேரளாவில் ஓணம் பண்டிகைக்கு பிறகு நோய்ப் பரவல் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதனையடுத்து, நாடு முழுவதும் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தடுப்பூசி போட்டுக் கொள்ள விரும்புபவர்கள் தங்களது தடுப்பூசி போட்டுக் கொள்ளும் நாளை வாட்ஸ்அப் மூலமாகவே பதிவு செய்து கொள்ளும் புதிய வசதியையும் மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தடுப்பூசி குறித்த முக்கிய தகவல் ஒன்றை தற்போது மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
அதில், கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொற்றினை தடுப்பதற்காக அல்ல எனவும், தொற்றின் வீரியத்தை குறைக்கவே செலுத்தப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது மற்றும் உயிர் இழப்பு ஏற்படுவது போன்றவற்றை 98.99% தடுப்பதற்கு தடுப்பூசி பலனளிக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.