அதிமுக ஆட்சியில் பயிர் கடன் மோசடி…அமைச்சர் குற்றச்சாட்டு!

அதிமுக ஆட்சியில் பயிர்க்கடன் வழங்கியதில் ரூ.516 கோடி முறைகேடு நடந்திருப்பதாக அமைச்சர் ஐ.பெரியசாமி அதிமுக மீது குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்.

சிட்டா அடங்கலில் குறிப்பிடப்பட்ட சாகுபடி நிலங்களின் பரப்பளவை அதிகரித்துக்காட்டி பலமடங்கு கூடுதல் கடன் பெற்றுள்ளதாக அமைச்சர் தெரிவித்திருக்கிறார். சேலம், நாமக்கலில் மட்டும் ரூ.503 கோடி முறைகேடு நடந்திருப்பதும் தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

ஏற்கெனவே தமிழ்நாடு தொழிலக கூட்டுறவு வங்கியில் சிறு,குறு நிறுவனங்கள் பெயரில் போலி நகைகளை வைத்து ரூ.7 கோடி மோசடி நடந்துள்ளதாக அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்திருந்த நிலையில் தற்போது பயிர்க்கடனில் மோசடி நடந்திருப்பதாக ஐ.பெரியசாமி தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பட்டாசு குடோன் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 3 லட்சம் நிவாரணம்… முதல்வர் அறிவிப்பு

சேலம் அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த மற்றும் காயம் அடைந்தவர்களின்…

பள்ளிக் கல்வித் துறையில் கலைஞர் நூற்றாண்டு கொண்டாடுவோம்… அமைச்சர் அன்பில்..!

தமிழ்நாடு முதலமைச்சரின் உலகத்  தரத்திலான பல்வேறு திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில்  நடப்பாண்டு…