ஊராட்சிமன்ற தலைவர்களுக்கு ஊதிய உயர்வு!

ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு மாத ஊதியம் 1000 ரூபாய் உயர்த்தப்பட்டு வழங்கப்படும் என ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் இன்று சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
அதன்படி, இதுவரை ஊராட்சி மன்ற தலைவர்கள் மாத ஊதியமாக ரூபாய் ஆயிரம் பெற்று வந்தனர். இனிவரும் காலங்களில் அவர்களுக்கு உயர்த்தப்பட்ட புதிய ஊதியமான ரூ. 2000 மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊதிய உயர்வின் மூலம் 12 ஆயிரத்திற்கும் அதிகமான ஊராட்சி களின் தலைவர்கள் பயனடைவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.