சென்னையில் 400 தடுப்பூசி முகாம்கள்!

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைவதும், அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே நாளொன்றுக்கு 1600-க்கும் அதிகமானோர் பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தடுப்பூசி மிக முக்கிய பங்காற்றி வருகிறது. இதனையடுத்து, தமிழக அரசு தடுப்பூசி செலுத்தும் பணிகளை துரிதப்படுத்தி உள்ளது.
அதன் ஒரு பகுதியாக சென்னையில் 400 முகாம்களை அமைத்து நாளை மறுநாள் ( ஆகஸ்ட் 26) அன்று பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்த உள்ளது.
இதற்காக சென்னையில் உள்ள 200 வார்டுகளில் ஒரு வார்டுக்கு இரண்டு முகாம்கள் என மொத்தம் 400 கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம்களை தமிழக அரசு அமைத்துள்ளது.
அடுத்த மாத தொடக்கத்தில் கொரோனா மூன்றாவது அலை வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தமிழக அரசின் இந்த முகாம்கள் அமைத்து தடுப்பூசி செலுத்தும் பணி முக்கியத்துவம் பெறுகிறது.