ஏழரை ஆண்டு மரண தண்டனையில் இருந்து விடுதலை… சசி தரூர் உணர்ச்சிவசம்

இந்தியாவின் எதிர்கட்சியான காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினரான சசி தரூர், துபாயைச் சேர்ந்த பெண் தொழில் அதிபரான சுனந்தா புஷ்கரை 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
2014 ஜனவரி 17ஆம் தேதி டெல்லியின் பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டலில் சுனந்தா இறந்து கிடந்தார். இந்நிலையில், மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக சசி தரூர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்த டெல்லி காவல்துறை, மனைவியை அவர் கொடுமைப்படுத்தியதாகவும் குற்றப்பத்திரிகையில் கூறியிருந்தது.
இந்த வழக்கு விசாரணையின்போது, சசி தரூர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விகால் பாஹ்வா, “ஆரம்பத்தில் இருந்தே டெல்லி காவல்துறையினர் இந்த வழக்கில் தவறான தகவல்கள் அடிப்படையில் குற்றச்சாட்டுகளை ஜோடித்தனர்,” என்று வாதிட்டார்.
சுனந்தா புஷ்கரை காதலித்து திருமணம் செய்து கொண்டவர் சசி தரூர் என்றும் அவரை தற்கொலைக்கு தூண்டியது சசி தரூர் தான் என்பதையும் நிரூபிக்க காவல்துறையிடம் ஆதாரங்கள் இல்லை என்றும் அவரது சார்பில் வாதிடப்பட்டது. இதனால் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து சசி தரூர், “ஏழரை ஆண்டுகளாக நான் நரக வேதனையை அனுபவித்தேன். உங்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன் நீதிபதி அவர்களே,” என்று தமது உணர்ச்சியை வெளிப்படுத்தினார்.