காபூலை கைப்பற்றிய தாலிபான்கள்!

ஆப்கானிஸ்தானில் ஆளும் அரசிற்கும் தலிபான்களுக்கும் இடையே மோதல் கடந்த சில தினங்களாக தீவிரமடைந்து வருகிறது.
ஆப்கானிஸ்தானின் பல்வேறு முக்கிய நகரங்களையும் தாலிபன்கள் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து இருக்கின்றனர். முன்னதாக தாலிபான்களை கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்க அரசு ராணுவத்தினரை அங்கு நிறுத்தியிருந்தது ஆனால், அண்மையில் அமெரிக்க ராணுவம் ஆப்கானிஸ்தானிலிருந்து தனது படையை விலக்கிக் கொண்டது.
அமெரிக்க ராணுவம் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறிய பிறகு தாலிபான்களுக்கு சாதகமான சூழல் அங்கு நிலவி வருகிறது.
இதனையடுத்து, ஆப்கானிஸ்தானில் முக்கிய நகரங்களை தாலிபன்கள் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டனர்.
இந்நிலையில், இன்று ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தாலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து தலைநகர் காபூலில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.
தலைநகர் காபூல் தாலிபான்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளதால் ஆப்கானிஸ்தானில் பதற்றமான சூழலே நிலவி வருகிறது.