கருணாநிதி பிறந்தநாளில் செம்மொழி விருது

தமிழ்நாட்டின் சட்டமன்றக் கூட்டம் இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் 2021 – 2022 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து வருகிறார்.
அப்போது, தமிழக வளர்ச்சிக்காகப் பல திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் உரையில் செம்மொழி விருதை அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர், “பொது நிலங்களை முறையாகப் பயன்படுத்த அரசு நில மேலாண்மை அமைப்பு அமைக்கப்படும். செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்டத்தின் கீழ் தமிழ் படைப்புகள் மொழி பெயர்க்கப்படும்.
ஆண்டுதோறும் ஜூன் 3ம் தேதி கருணாநிதி செம்மொழித்தமிழ் விருதும்,10 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்படும்.
நிதியாண்டின் எஞ்சிய 6 மாத காலத்துக்கு மட்டுமே இந்த நிதிநிலை அறிக்கை பொருந்தும். எந்தவொரு சிக்கல்களையும் சரி செய்யும் முதல் படி அதனை அடையாளம் கண்டு அதன் ஆழத்தை புரிந்து கொள்வதுதான்” எனக் கூறியுள்ளார்.