தமிழகத்தில் நீட்டிக்கப்படும் ஊரடங்கு!

தமிழகத்தில் கொரோனா பரவல் கடந்த சில தினங்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது.
இதனையடுத்து, தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அரசு அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகத்தில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
இந்த கட்டுப்பாடுகள் வரும் 09.08.20201 முதல் 23.8.2021 காலை 06:00 மணி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில புதிய கட்டுப்பாடுகளும் தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்கும் வகையில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் வழிப்பாட்டுக்கு மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 9, 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு வரும் செப்டம்பர் 1 முதல் ஒவ்வொரு கிளாஸ் ரூமிலும் ஒரே நேரத்தில் 50 சதவிகித மாணவர்களுடன் பள்ளிகளை துவக்க உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. அதற்கான நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித்துறை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இறைச்சி மற்றும் மீன் கடைகளில் மக்கள் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு திறந்தவெளியில் தனித்தனியாக அந்த கடைகள் இயங்குவதை உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.
வணிக நிறுவனங்கள், கடைகள் மாறும் பொது மக்கள் கூடுகின்ற இடங்களில் வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.
இந்த விதிமுறைகளை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது