இவர்களுக்கும் தடுப்பூசியை உறுதி செய்க… உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்!

தமிழகத்தில் கொரோனா பரவல் கடந்த சில நாட்களாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனையடுத்து தடுப்பூசி செலுத்தும் பணிகளை அரசு மேலும் துரிதப்படுத்தியுள்ளது.
தற்போது தமிழகத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசிற்கு, மூன்றாம் பாலினத்தவர்க்கும் தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
மேலும், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு அடுத்த மூன்று மாதங்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வழிவகை செய்யுமாறு தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
கொரோனா மூன்றாவது அலை ஏற்பட்டால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவர் என மருத்துவ வல்லுநர்கள் கூறிய நிலையில், குழந்தைகளுக்கு வருகிற ஆகஸ்ட் முதல் தடுப்பு ஊசி செலுத்தப்படும் என அன்மையில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.