தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரிக்கிறதா?

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் தொடர்ந்து குறைந்து வந்தது. இதனையடுத்து தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தது.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரிக்கும் மாவட்டங்களில் தேவையான நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மேலும், எந்தப் பகுதியில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவுக்கு வரவிருக்கும் நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.