மேரி கோம் தோல்வி!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
ஒவ்வொரு நாட்டு வீரர், வீராங்கனைகளும் போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கங்களை குவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்தியா சார்பில் குத்துச்சண்டை போட்டியில் கலந்துகொண்ட மேரி கோம் தற்போது தோல்வியைத் தழுவியுள்ளார்.
காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 51 கிலோ எடைப் பிரிவில் மேரிகோம் கலந்துகொண்டார். அதில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட கொலம்பியா வீராங்கனை வேலன்சியாவிடம் 3-2 என்ற கணக்கில் தோல்வி அடைந்தார்.