சபாநாயகருடன் சந்திப்பு ; திமுகவில் இணைகிறாரா புகழேந்தி!

அதிமுகவின் கர்நாடக மாநில செயலாளராகவும், அக்கட்சியின் முன்னணி தலைவர்களுள் ஒருவருமாக இருந்துவந்த புகழேந்தி, சமீபத்தில் கட்சியிலிருந்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோரால் நீக்கப்பட்டார். அதற்கான காரணம், தங்களின் வாக்கு பலத்தினாலேயே நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக அதிகப்படியான இடங்களில் வென்றதாக தெரிவித்த பாமகவின் இளைஞரணி தலைவர் அன்புமணிக்கு காட்டமாக பதிலளித்ததுதான்.

இந்நிலையில், நேற்றைய தினம் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுவை நேரில் சந்தித்தார் புகழேந்தி. இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த புகழேந்தி, “திராவிட இயக்க கொள்கைகளை காப்பாற்ற திமுகவால் மட்டுமே முடியும். அப்பாவு அவர்கள் என்னோடு செய்தி தொலைக்காட்சிகளில் பல விவாதங்களில் கலந்துகொண்டவர் அதன் அடிப்படையிலேயே அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன் என்றார்.

மேலும், தங்களது அடிமை வாழக்கையை காப்பாற்றிக்கொள்வதற்காக தற்போது டெல்லி வீதிகளில் சுற்றித்திரிந்து கொண்டிருக்கிறார்கள் எடப்பாடி பழனிசாமியும், பன்னீர்செல்வமும். இவர்களால் அதிமுகவை பாஜகவிடமிருந்து காப்பாற்ற முடியாது. சசிகலாவால் மட்டுமே அதிமுகவை காப்பாற்ற முடியுமென” தெரிவித்துள்ளார் புகழேந்தி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அத்திக்கடவு  திட்டம் வருகின்ற ஜூன் மாதம் பயன்பாட்டிற்கு வரும்… அமைச்சர் மு.பெ சாமிநாதன் உறுதி.

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அத்திக்கடவு அவிநாசி திட்டத்தின்…

 “ஹிஜாப் அணிந்த மருத்துவரை மிரட்டிய பாஜக நபரை சட்டத்தின் அடிப்படையில் கடுமையாக தண்டிக்க வேண்டும்”- மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா

-ஊடகவியலாளர் இராகவேந்திரன்  “ஹிஜாப் அணிந்த மருத்துவரை மிரட்டிய பாஜக நபரை சட்டத்தின் அடிப்படையில்…

தலைமை செயலாளருக்கு பறந்த ஆர்டர்!செந்தில்பாலாஜிக்கு ஸ்டாலின் “செம டோஸ்”?

ஊடகவியலாளர் மெ.சிவநந்தினி செந்தில் பாலாஜியிடம் ரெய்டு நடத்தப்பட்டு வரும் நிலையில், ஒட்டுமொத்த திமுகவும்…

ஐ.டி ரெய்டு | ‘பாஜகவின் கேவலமான அரசியல்; செந்தில்பாலாஜியை முடக்க அண்ணாமலை திட்டம்’ – திமுக காட்டம்

-ஊடகவியலாளர் இராகவேந்திரன் முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், வருமானவரித் துறை…