அதிமுகவை தனிப்பட்ட குடும்பம் வழிநடத்த முடியாது… ஓபிஎஸ் உறுதி.!

தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் திமுக ஆட்சியைக் கண்டித்து இன்று அதிமுகவினர் ரோராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பாக, ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் கடந்த 23-ம் தேதி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தனர்.
அதன்படி, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக உள்ள ஓபிஎஸ் உள்ளிட்டோர் தங்கள் வீடுகளின் முன்பு கையில் பதாகைகளை ஏந்தி திமுகவிற்கு எதிராக முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தேனியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது அவரிடம் சசிகலா ஆடியோ விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், ”அதிமுகவை யாரும் கைப்பற்ற முடியாது. நான்கரை ஆண்டுகளாக நாங்கள் இருவரும் அதிமுகவை வழிநடத்தி வருகிறோம்“ என்று கூறியுள்ளார். இவர், டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.