கூடுதல் கவனமாக இருங்கள்… மாநில அரசுகளுக்கு உள்துறை செயலர் கடிதம்!

நாடு முழுவதும் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக கொரோனா பரவல் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. மேலும், தடுப்பூசி போடும் பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இந்நிலையில், இன்று உள்துறை செயலர் அஜய் பல்லா யூனியன் பிரதேசங்கள் மற்றும் மாநிலங்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், பண்டிகைக் காலம் நெருங்குவதால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் யூனியன் பிரதேசங்கள் மற்றும் மாநிலங்கள் அனைத்தும் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கட்டுப்பாடுகளை மேலும் அதிகப்படுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். கொரோனா மூன்றாவது அலைக்கு இந்தப் பண்டிகை காலம் காரணமாக அமைந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருங்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
கொரோனா மூன்றாவது அலை குழந்தைகளை குறிவைத்து தாக்கும் என மருத்துவ வல்லுநர்கள் கூறியிருந்த நிலையில், வருகிற ஆகஸ்ட் முதல் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.