கருணாநிதி உருவப்படம் திறக்கும் நிகழ்ச்சி ; பங்கேற்கிறார் குடியரசுத் தலைவர்!

எதிர்வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படம் திறக்கும் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2006- 2011 ஆட்சிக்காலத்திற்கு பிறகு தற்போதுதான் மீண்டும் ஆட்சி பொறுப்புக்கு வந்துள்ளது திமுக . ஆட்சிக்கு வந்த பிறகு சட்டப்பேரவையில் கருணாநிதியின் உருவப்படம் திறக்கப்படுமென என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், எதிர்வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி இந்நிகழ்ச்சியானது நடைபெறவுள்ளது. இதில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொள்வது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், நிகழ்ச்சிக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தலைமையேற்பார் எனவும், நிகழ்வுக்கான ஏற்பாடுகளை சட்டப்பேரவை செயலகம் மேற்கொண்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார் சபாநாயகர் அப்பாவு. மேலும், எவ்வித பேதங்களும் பார்க்காமல் இந்நிகழ்ச்சிக்கான அழைப்பு அனைத்து தரப்பினருக்கும் வழங்கப்படுமெனவும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கருணாநிதியின் உருவப்பட திறப்பு நிகழ்ச்சிக்கு வருமாறு குடியரசுத் தலைவருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரில் அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது