அதிமுக தோற்றதற்கு யார் காரணம்… முன்னாள் எம்பியின் சர்ச்சை பேச்சு

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக கூட்டணி தோல்வியடைந்து ஆட்சியை இழந்தது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள தனியார் மண்டபத்தில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் எம்பி அன்வர் ராஜா பங்கேற்று பேசினார்.
அப்போது, அவர் இந்தத் தேர்தலில் எம்ஜிஆர் பெயரையும், ஜெயலலிதாவின் பெயரையும் கூற அதிமுகவினர் மறந்தனர். அதனால், மக்களும் ஓட்டு போடும் போது, அதிமுகவை மறந்து விட்டனர் எனப் பேசியுள்ளார்.
மேலும், அவர் ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்து இருந்தால் 300க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டு இருப்பார்கள் என்று கூறிய அன்வர் ராஜா, தற்போது அதிமுக தோல்வி அடைந்ததில் ஒருவர் கூட தற்கொலை செய்யாதது ஏன்? என பேசியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.