சாதித்து காட்டிய விஜய்… அவர் மீதான விமர்சனங்களும் நீக்கப்படுமா.?

நடிகர் விஜய் தன்னுடைய ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காருக்கு இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அண்மையில், இந்த வழக்கின் தீர்ப்பு வந்தது.
அதில், விஜய்க்கு ஒரு லட்சம் அபதராதம் விதித்து தனி நீதிபதி உத்தரவிட்டார். மேலும், திரையில் மட்டுமல்லாமல் நிஜத்திலும் ஹீரோவாக இருங்கள் என விஜய் மீது விமர்சனம் வைத்திருந்தார்.
இதனை எதிர்த்து விஜய் மேல் முறையீடு செய்திருந்தார். அதில், தன் மீதான அபராதத்தையும், விமர்சனத்தையும் நீக்குமாறு விஜய் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று விஜய் மீதான் அபராதத்தை நீக்கி சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஏற்கனவே 20% வரியை விஜய் கட்டியுள்ளதால் மீதமுள்ள 80% வரியை ஒரு வாரத்திற்குள் கட்ட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.