அதிமுகவின் தோல்வி தற்காலிகமானதுதான் ; விரைவில் எல்லாம் சரியாகும் – சசிகலா!

அதிமுகவின் தோல்வி தாற்காலிகமானதுதான் எனவும், தான் தலைமையேற்கையில் அதிமுக மீண்டும் வெற்றிப்பாதையில் பயணிக்கும் எனவும் தெரிவித்துள்ளார் சசிகலா.

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று நான்கு ஆண்டுகள் சிறையில் கழித்துவிட்டு தமிழகம் திரும்பிய சசிகலா, சட்டப்பேரவை தேர்தல் சமயத்தில் எவ்வித அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபடாமல் அமைதி காத்தார். தினகரனின் அம்மா முன்னேற்ற கழக வேட்பாளர்களுக்கு கூட அவர் வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கவில்லை.

அதற்கான காரணம், அதிமுகவின் பொதுச்செயலாளர் தாம் தானென நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கின் காரணமாகவே சசிகலா தேர்தல் சமயத்தில் அமைதி காத்ததாக அரசியல் நோக்கர்கள் கூறி வந்த நிலையில், மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடுவதற்கான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளார் சசிகலா.

அதிமுகவின் அவைத்தலைவர் மதுசூதனின் உடல்நலம் குறித்து சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அதிமுக கொடி கட்டிய ஜெயலலிதாவின் காரில் சென்று வந்தார் சசிகலா. இது அதிமுகவின் மீதான தமது உரிமையை அவர் ஒருபோதும் விட்டுத்தரப்போவதில்லை என்பதனை வெளிப்படுத்துவதாக அமைந்ததாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், அதிமுகவின் தற்போதைய தோல்விகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்துள்ள சசிகலா, ஜெயலலிதாவின் மரணத்தின் பிறகு கட்சியில் ஏற்பட்ட குழப்பங்களும், எடப்பாடி பழனிசாமி – ஓபிஎஸ் போன்றவர்களின் சுயநலன் சார்ந்த அரசியலுமே அதிமுக கடந்த மக்களவை – சட்டமன்ற தேர்தல்களில் தோல்வியை தழுவிட காரணம். வரும் காலங்களில் எல்லோரையும் அரவணைத்து செல்லும் அரசியலை நான் முன்னெடுப்பேன். அப்போது அதிமுக மீண்டும் வெற்றிப்பாதையில் பயணிக்குமென தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி இறப்பு வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றம்

கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி இறப்பு வழக்கை கள்ளக்குறிச்சி நீதிமன்றத்திற்கு மாற்றி…

ஒப்பந்த செவிலியர்களை பணி நீக்கம் செய்த என்எல்சி மருத்துவமனை கண்டித்து போராட்டம்

நெய்வேலி என்எல்சி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய உதவி செவிலியர்களை பணி நீக்கம்…