சசிகலா குறித்த கேள்வி ; பதிலளிக்க மறுத்து பதறிய பழனிசாமி!
அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக முன்னணி தலைவர்கள் இன்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தனர். தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகள் வழங்குவது உள்ளிட்ட தமிழகத்தின் தேவைகளுக்காகவே பிரதமரை சந்தித்தோம் என அவர்கள் தெரிவித்தபோதும், உட்கட்சி விவகாரங்களுக்காகவே இந்த சந்திப்பு நடைபெற்றதென அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.
இந்த நிலையில், பிரதமர் மோடியை சந்தித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவினர் மாற்று காட்சிகளில் இணைவது குறித்து, அதிமுக தலைமை மீது எந்த தொண்டனுக்கும் அதிருப்தி இல்லை ; தேர்தலில் போட்டியிட வாய்ப்புக்கு கிடைக்காதவர்கள் மாற்று கட்சிகளுக்கு செல்கிறார்கள் என தெரிவித்தார்.
அதே சமயம், சசிகலா அதிமுகவை மீட்பேன் என்று பேசிவருவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்க மறுத்து சென்றுவிட்டனர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர்.
முன்னதாக, சசிகலா தரப்பினரை கட்சியில் இணைத்து முக்கிய பொறுப்பினை வழங்க எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோருக்கு பாஜக அழுத்தம் தருவதாக செய்திகள் வெளியாகிவருவது குறிப்பிடத்தக்கது.