பெகாசஸ் உளவு செயலி; போராட்டம் நடத்தும் மே17 இயக்கம்

இத்தாலியின் உளவு செயலியான செகாசஸ் மூலம் இந்தியாவில் உள்ள முக்கிய பத்திரிக்கையாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் செல்போன் உரையாடல்கள் ஒட்டு கேட்க்கப்பட்டுள்ள விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.
மேலும், இந்த தகவல்கள் அனைத்தும் இந்தியாவிற்கு விற்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், இதற்கு பொறுப்பேற்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், இந்த விவகாரத்தைக் கண்டித்து, இன்று மாலை 4 மணியளவில் வள்ளுவர் கோட்டம் அருகே போராட்டம் நடைபெற்றது.
இதில், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் தோழர் கோவை கு.இராமகிருட்டிணன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
இவர்கள் தவிர விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் முனைவர் தொல். திருமாவளவன்,
இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஜி.இராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
அதில், இந்தியர்களி உளவு பார்த்ததற்கு பொறுப்பேற்று பிரதமர் மோடி உடனடியாக பதவி விலக வேண்டும். போலியான வழக்கில் கைது செய்த பீமா கோரேகான் தோழர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பது போன்ற பல கோரிக்கைகள் இடம்பெற்றிருந்தன.