முதல்வர் பொறுப்பிலிருந்து நீக்குவதா – எடியூரப்பாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் சு.சாமி!

கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பாவை, முதல்வர் பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டு வேறு ஒருவரை அப்பதவியில் அமரவைக்க பாஜக மேலிடம் முயல்வதாக செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்க கூடிய சூழலில், எடியூரப்பாவிற்கு ஆதரவான கருத்துக்களை தெரிவித்துள்ளார் சுப்ரமணியசாமி.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சுப்ரமணிய சாமி, கர்நாடகாவில் பாரதிய ஜனதா ஆட்சி முதன்முதலில் அமைய எடியூரப்பாதான் காரணம், சிலர் தங்கள் சுய நலத்திற்காக எடியூரப்பாவை முதல்வர் பதவியிலிருந்து நீக்க முயற்சி செய்து வருகிறார்கள். அப்படி எடியூரப்பாவை முதல்வர் பதவியிலிருந்து நீக்கினால் கர்நாடகாவில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வரமுடியாது என தெரிவித்துள்ளார் சுப்ரமணிய சாமி.
முன்னதாக, முதல்வராக தொடர எடியூரப்பாவிற்கு லிங்காயத்து, ஜெகத்குரு முருகராஜேந்திர மடம், ரம்பாபுரி பீடம் உள்ளிட்ட பல்வேறு மடங்கள் ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.