ஜனநாயகத்திற்கு விரோதமான நடவடிக்கைக ளை திமுக நிறுத்த வேண்டும்… ஓபிஎஸ் குற்றச்சாட்டு!
இன்று முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான சென்னை மற்றும் கரூரில் உள்ள 24 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது.
இது குறித்து பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களின் வீட்டில் நடத்தப்படும் ரெய்டு அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நடத்தப்படுவது என குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமையகத்தில் பேசிய அவர், ரெய்டு மூலமாக அச்சுறுத்தினால் அதனையும் எதிர்கொள்ள அதிமுக தயாராகவே உள்ளது. இது போன்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகளை திமுக அரசு நிறுத்திக்கொள்ளவேண்டும். மேலும், இதுகுறித்த சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு அதிமுக இது போன்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகளை திமுக அரசு நிறுத்திக்கொள்ளவேண்டும். மேலும், இதுகுறித்த சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு அதிமுக தயாராகவே உள்ளது. எந்தவொரு புதிய அரசும் இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்தால் அரசியலில் அபாயகரமான சூழலினை உருவாக்கும். அரசியல் காழ்ப்புணர்ச்சியால் திமுக அரசு ரெய்டு நடத்துவது கண்டனத்திற்குரியது என்று தெரிவித்தார்.