தொடர் அமளி; இன்றும் அவை ஒத்திவைப்பு

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 13 ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. நேற்று தொடங்கிய கூட்டத்தில் பெட்ரோல் டீசல் விலை மற்றும் பெகாசஸ் விவகாரம் ஆகியவை குறித்து எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பியதால் அமளி ஏற்பட்டது.
இதனால் இரு அவைகளும் நேற்று முழுவதும் ஒத்தி வைக்க்கப்பட்டது. இந்நிலையில், இன்று காலை அவை தொடங்கியது. இன்றும் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கியத் தலைவர்களின் செல்போன்கள் உளவு பார்க்கப்பட்டதற்கு எதிராக எதிர்கட்சிகள் இன்றும் அமளியில் ஈடுபட்டனர்.
இதனால், மக்களவையை இன்று பிற்பகல் வரை 2 மணி வரை ஒத்தி வைப்பதாக தலைவர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார். இதே போன்று மாநிலங்களவையிலும் அமளி ஏற்பட்டதால் அவை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.