அதிமுகவே என் தோல்விக்கு காரணம் ; அதிரடி கிளப்பும் ஜான்பாண்டியன்!

தாம் சட்டப்பேரவை தேர்தலில் தோல்வியடைந்ததற்கு அதிமுகவே காரணமென தெரிவித்துள்ளார் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவனர் ஜான்பாண்டியன். நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக, பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தார் ஜான்பாண்டியன். தென்மாவட்டங்களில் தேவேந்திர குல வேளாளர்களின் வலுவான வாக்கு வங்கியை கொண்டுள்ள ஜான்பாண்டியன் கட்சியினர், அவர்களது கட்சிக்கு அதிமுக கூட்டணியில் இடம் கொடுக்கப்படுமென எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர்.
ஆனால், சென்னை எழும்பூர் தனி தொகுதி ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், அங்கு இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட்ட ஜான்பாண்டியன், திமுகவின் வேட்பாளர் பரந்தாமனிடம் தோல்வியை தழுவினார் . தேர்தல் தோல்விக்கு பிறகு அமைத்து காத்து வந்த ஜான்பாண்டியன், தாம் சட்டப்பேரவை தேர்தலில் தோல்வியடைந்ததற்கு அதிமுகவே காரணமென தெரிவித்துள்ளார். தொடர்பில்லாத எழும்பூர் தொகுதியில் தம்மை நிற்க வைத்து தோல்வியடைய செய்துவிட்டனர் எனவும் அதிமுக மீது குற்றம் சாட்டியிருக்கிறார் ஜான் பாண்டியன்.
மேலும், தேவேந்திர குல வேளாளர்கள் பெயர் மாற்ற கோரிக்கையினை ஆதரித்த காரணத்தினாலேயே தாம் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளித்ததாகவும் தெரிவித்துள்ளார் ஜான்பாண்டியன்.