இன்று வெளியாகிறது +2 தேர்வு முடிவுகள் ; அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி வெளியிடுகிறார்!
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்றின் காரணமாக 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்களின் முந்தைய வகுப்பு தேர்ச்சிகளின் அடிப்படையிலேயே மதிப்பெண்கள் வழங்கப்படுமென அரசு அறிவித்திருந்த நிலையில், இன்று காலை 11 மணியளவில் 2020-2021ஆம் கல்வியாண்டில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பயின்ற பள்ளி மாணவர்களின் பொதுத் தேர்வு முடிவுகளை வெளியிடுகிறார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
மாணவர்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in 2.www.dge1.tn.nic.in 3. www.dge2.tn.nic.in என்ற இணையதளங்கள் வாயிலாக அறிந்துகொள்ளலாம். எதிர்வரும் 22 ஆம் தேதி முதல் www.dge.tn.nic.in ஆகிய இணையதளங்களில் மதிப்பெண் பட்டியலை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். மாணவர்களுக்கு குறுஞ்செய்தி மூலமாகவும் தேர்வு முடிவுகள் அனுப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை இயக்ககம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.