நாளை மறுநாள் வெளியாகிறது 12 ஆம் தேர்வு முடிவுகள் – அரசு அறிவிப்பு!

நாளை மறுநாள் (ஜூலை 19 ஆம் தேதி) பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் 2020-2021ஆம் கல்வியாண்டில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பயின்ற பள்ளி மாணவர்களின் பொதுத் தேர்வு முடிவுகள், 19.07.2021 அன்று காலை 11.00 மணிக்கு வெளியிடப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை கீழ்க்குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் வாயிலாக அறிந்து கொள்ளலாம் எனவும் அரசு தெரிவித்துள்ளது. (www.tnresults.nic.in 2.www.dge1.tn.nic.in 3. www.dge2.tn.nic.in)
முன்னதாக, கோரோனோ பெருந்தொற்றின் காரணமாக 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்களின் முந்தைய வகுப்பு தேர்ச்சிகளின் அடிப்படையிலேயே மதிப்பெண்கள் வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.