முதலமைச்சரின் டெல்லி பயணம் எப்போது?

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதில் கர்நாடக அரசு தீவிரமாக உள்ளது. ஆனால், அந்த அணையினால் விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள் என தமிழ்நாடு அரசு தொடர்ந்து எதிர்த்து வருகிறது.
இதற்காக அண்மையில், முதலமைச்சர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில், மேமதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், அனைத்து கட்சி குழுவினரும் மத்திய நீர்வளத்துறை அமைச்சரை இன்று பிற்பகல் சந்தித்து மேகதாது அணை தொடர்பாக பேசவுள்ளனர். இந்நிலையில், தமிழக சட்டமன்ற கட்சி பிரதிநிதிகள் குழுவை தொடர்ந்து, தமிழக முதலமைச்சர் வரும் 18 ஆம் தேதி டெல்லி செல்கிறார்.
இந்நிலையில், கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா இன்று பிரதமரைச் சந்தித்து மேகதாது அணைக்கு அனுமதி கேட்கவுள்ளார். தமிழக முதலமைச்சர் ஸ்டாலினும் டெல்லி பயணம் குறித்து அறிவித்துள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.