ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்படுமா? இன்று ஆலோசனை

தமிழ்நாட்டில் , அதிகரித்து வந்த கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு அமலில் இருந்தது. இந்த ஊரடங்கு வரும் 19 ஆம் தேதி முதல் முடிவடையவுள்ள நிலையில், ஊரடங்கில் தளர்வுகளை அளிப்பது குறித்து இன்று முதலமைச்சர் ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்.

இன்று காலை 11 மணிக்கு நடைபெறும் ஆலோசனைக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர், பொதுத்துறைச் செயலாளர், மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர், டிஜிபி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

கடந்த வார ஊரடங்கில் புதுச்சேரிக்கு மட்டும் பேருந்து சேவை அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த வாரம் கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களுக்கு பேருந்து சேவைகளை வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், திரையரங்கம், பார்கள் மற்றும் உடற்பயிற்சிக்கூடங்களை திறப்பது குறித்தும், டீ கடைகள் மற்றும் உணவகங்கள் திறந்திருப்பதற்கான நேரம், இரவு 9 மணியில் இருந்து, 10 மணி வரை நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *