தமிழகத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் தொடர்ந்து குறைந்து வருகிறது. மேலும்,தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தமிழக அரசினால் துரிதப்படுத்த பட்டுள்ளது.

கொரோனா பரவல் குறைந்ததன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. மேலும், முன்னதாக மாவட்டங்கள் மூன்று வகைப் படுத்தப் பட்டு நோய் பரவலுக்கு ஏற்றவாறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தன. ஆனால், கடந்த அறிவிப்பில் இந்த மூன்று வகையான மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

அந்த அறிவிப்பில் மாவட்டங்களுக்கு உள்ளேயும்,வெளியேயும் பொது போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்படலாம் என அறிவிக்கப்பட்டது. மேலும், மத வழிபாட்டு தலங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது.

தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட இந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகின்ற 19 ஆம் தேதி முடிவடைய இருந்த நிலையில் தற்போது தமிழக அரசு அதனை மீண்டும் நீட்டித்துள்ளது.

அதன்படி, வருகிற ஜூலை 31-ஆம் தேதி வரை தமிழகத்தில் தளர்வுளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த புதிய அறிவிப்பில் மேலும் சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. நிர்வாகப் பணிகள் தொய்வின்றி நடைபெற ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து பணிபுரிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர் சேர்க்கை, புத்தக விநியோகம் மற்றும் பாடத்திட்ட தயாரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஐடிஐ போன்ற தொழிற்பயிற்சி நிலையங்கள், தட்டச்சு பயிற்சி நிலையங்கள் 50 சதவீத மாணவர்களுடன் இயங்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.

திரையரங்குகள், நீச்சல் குளங்கள் மற்றும் மதுபான கடைகள் போன்றவற்றிற்கான தடைகள் அப்படியே தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பள்ளி மற்றும் கல்லூரிகளை திறப்பதற்கான தடையும் தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவிட்டதாக ராணுவ வீரர் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்.

கிருஷ்ணகிரி அருகே சின்ன அக்ரஹாரம் கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் செந்தில் குமார்…

சத்தியமங்கலம்  மலைப்பகுதியில்  திடீரென்று தரை இறங்கிய ஹெலிகாப்டரால் பரபரப்பு …

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதி உகினியம் மலை கிராமத்தில் இன்று…