சென்னையில் கனமழை!
சென்னையில் இன்று மாலையிலிருந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு முக்கிய சாலைகளிலும் நீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
சென்னை மட்டுமல்லாது, காஞ்சிபுரம்,செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் சாலைகளில் நீர் தேங்கி போக்குவரத்துக்கு பெரும் இடையூறாக இருந்து வருகிறது.
இந்நிலையில், சென்னை, காஞ்சிபுரம்,திருவள்ளூர், சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.