தமிழகத்தில் புதிதாக நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படும்… மத்திய அமைச்சர் பேட்டி!

தமிழகத்தில் புதிதாக நான்கு நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என மத்திய கல்வி துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இருக்கும் நீட் தேர்வு மையங்களுடன் கூடுதலாக இந்த புதிய தேர்வு மையங்களும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு, விருதுநகர், திண்டுக்கல் மற்றும் திருப்பூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் புதிதாக நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
நீட் தேர்வு குறித்து ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி இடையே கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கும் வேளையில் தற்போது இந்த புதிய தேர்வு மையங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் நீட் தேர்வு வருகிற செப்டம்பர் 12-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.