நீட் விவகாரம் ; முதல்வரிடம் அறிக்கை அளிக்க உள்ள ஏ.கே ராஜன் குழு!

மருத்துவப்படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வின் காரணமாக தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுவது குறித்த கருத்துக்களை கேட்க தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே ராஜன் தலைமையில் குழு அமைத்திருந்தது. நீட் தேர்வின் காரணமாக மாணவர்கள் எவ்வாறான பாதிப்புகளுக்கு ஆளாகிறார்கள், நீட் தேர்வு முறைக்கு மாற்று வழி என்ன என்பது குறித்தெல்லாம் பொதுமக்கள், பெற்றோர்கள் உள்ளிட்டோரிடம் தொடர்ச்சியாக அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்து வந்தது ஏ.கே ராஜன் குழு.
இந்நிலையில், இன்றைய தினம் நீட் நுழைவுத் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுவது குறித்த தமது அறிக்கையை முதல்வர் ஸ்டாலின் சமர்ப்பிக்க உள்ளது ஏ.கே ராஜன் குழு.
முன்னதாக, நீட் நுழைவுத்தேர்வு குறித்து கருத்துக்களை கேட்கும் வகையில் குழு அமைப்பதென்பது மாநில அரசின் அதிகார வரம்புக்கு அப்பாற்பட்டது என சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.