நீட் தேர்வில் மாற்றம்!
மருத்துவபடிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு இந்தாண்டு செப்டம்பர் 12 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான முன்பதிவு நேற்று(14.7.2021) தொடங்கப்பட்டது.
இந்நிலையில் உள்ள நீட் தேர்வு வினாத் தாள்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது வரை மாணவர்களுக்கும் மொத்தம் 180 கேள்விகள் கேட்கப்பட்டு ஒவ்வொன்றிற்கும் 4 மதிப்பெண்கள் வீதம் 720 மதிப்பெண்கள் கொடுக்கப்படும்.
தற்போது இந்த முறை மாற்றப்பட்டுள்ளது. ஏ பிரிவில் 35 கேள்விகள் மற்றும் பி பிரிவில் 20 கேள்விகள் என நான்கு பாடத்திற்கும் சேர்த்து மொத்தம் 200 கேள்விகள் இடம்பெற்றிருக்கும். இதில், மாணவர்கள் ஏ பிரிவில் உள்ள அனைத்து கேள்விகளுக்கும், பி பிரிவில் உள்ள 20 கேள்விகளில் ஏதேனும் 15 கேள்விகளுக்கு மட்டும் விடையளித்தால் போதுமானது.
இதன் மூலம், பி பிரிவில் 5 கேள்விகளுக்கு மாணவர்களுக்கு சாய்ஸ் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தவறான விடையைத் தேர்ந்தெடுத்தால் மைனஸ் மதிப்பெண்ணாக ஒரு மதிப்பெண் கழிக்கப்படும் என்றும் பதில் அளிக்கவில்லை என்றால் மதிப்பெண் கழிக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.