மேகதாது விவகாரம், அனைத்துக் கட்சி குழு நாளை டெல்லி பயணம்!

மேகதாது அணை விவகாரம் நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது. கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதில் தொடர்ந்து முனைப்பு காட்டி வருகிறது.
தமிழகத்தில் மேகதாது அணை கட்டுவதை எதிர்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மேலும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துகட்சி கூட்டமும் நடைபெற்றது.
என்னதான் எதிர்ப்புகள் கிளம்பினாலும் கர்நாடக அரசு அதன் முயற்சியிலிருந்து பின்வாங்குவதாக தெரியவில்லை.
இந்நிலையில், நாளை அனைத்து கட்சி குழு மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பிரதமரை சந்திக்க டெல்லி செல்ல உள்ளது.
நாளை மதியம் 1 மணி அளவில் அனைத்து கட்சி குழு டெல்லிக்கு புறப்பட உள்ளது.