ராம்நாடு..ஒரத்தநாடு ; கொங்குநாடு சர்ச்சை குறித்து வடிவேலு கலகலப்பு பேச்சு!

தமிழக மக்கள் அனைவரும் தவறாமல் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டுமெனவும், கொரோனா தடுப்பு பணிகளில் தமிழக அரசும், முதல்வர் ஸ்டாலினும் சிறப்பாக செயல்படுவதாக தெரிவித்துள்ளார் நகைச்சுவை நடிகர் வடிவேலு.
தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்து ரூ.5 லட்சம் கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்கான பொது நிவாரண நிதிக்கு நன்கொடையாக வழங்கினார் நடிகர் வடிவேலு. அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வடிவேலு, “கொரோனா தடுப்பு பணிகளில் சிறப்பாக செயல்படுகிறது. வீதி வீதியாக தடுப்பூசி செலுத்தப்படுகிறது. மக்கள் அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டுமென” தெரிவித்தார்.
மேலும், கொங்கு நாடு சர்ச்சை குறித்து பேசிய வடிவேலு, “ஒரத்த நாடு, ராம் நாடு, கொங்கு நாடு இன்னும் எத்தனை நாடு தான் இருக்கு.இதையெல்லாம் கேட்கும் போதே தலை சுற்றுகிறது. நல்லா இருக்கிற தமிழ்நாட்டை ஏன் பிரிக்கணும்” என தெரிவித்துள்ளார்.