ரீல் ஹீரோவா விஜய்? உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

நடிகர் விஜய் தனக்கு சொந்தமாக இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் காரை வைத்துள்ளார். இதற்கான நுழைவு வரியை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

2012 ஆம் ஆண்டு தொடரப்பட்ட இந்த வழக்குக்கு தற்போது சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனையடுத்து நடிகர் விஜய்க்கு 1 லட்ச ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் அபராதம் வழங்கியுள்ளது.

இந்த அபராதத் தொகையை முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்குமாறு உத்தரவிட்டுள்ளது. மேலும், சமூக நீதிக்காகப் போராடுவதாக சொல்லிக் கொள்ளும் நடிகர்கள் வரியைச் செலுத்தாமல் இருப்பது ஏற்புடையதல்ல.

நடிகர்கள் ரியல் ஹீரோவாக இருக்க வேண்டும். வரி ஏய்ப்பு என்பது தேசத் துரோகத்திற்குச் சமம். இரண்டு வாரங்களுக்குள் அபராதத்தையும் வரியையும் செலுத்த வேண்டுமெனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *