ஏ.கே ராஜன் குழுவுக்கு எதிரான மனு தள்ளுபடி – உயர்நீதிமன்றம் உத்தரவு!

நீட் நுழைவுத்தேர்வின் காரணமாக தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுவது குறித்த கருத்துக்களை கேட்க தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே ராஜன் தலைமையில் குழு அமைத்துள்ளது. இக்குழு தமிழக மாணவர்கள் நீட் நுழைவுத்தேர்வால் பாதிக்கப்படுவது குறித்த பொதுமக்கள் மற்றும் பெற்றோர்களின் கருத்துக்களை கேட்டு வருகிறது.
அதே சமயம், பாஜகவின் முன்னணி தலைவர்களுள் ஒருவரான கரு. நாகராஜன் என்பவர், நீட் நுழைவுத்தேர்வால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுவது குறித்த பொதுமக்களின் கருத்துக்களை கேட்க தமிழக அரசு அமைத்த ஏ.கே ராஜன் குழுவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இம்மனுவினை விசாரித்த உயர்நீதிமன்றம், நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்களா? என்பது குறித்த கருத்துக்களையே கேட்க கூடாது என தெரிவிக்க நீங்கள் யார்? இப்படியான வழக்குகளை தொடர்வதன் மூலம் மனுதாரருக்கு நல்ல விளம்பரம் கிடைத்துள்ளது எனவும், ஏ.கே ராஜன் குழுவுக்கு எதிரான மனுவினை தள்ளுபடி செய்வதாகவும் உத்தரவிட்டுள்ளது.