ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு : அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை – ரஜினிகாந்த் அறிவிப்பு!

எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லாத காரணத்தினால், ரஜினி மக்கள் மன்றம் மற்றும் அதன் சார்பு அணிகளை கலைப்பதாகவும், இனி தனது ரசிகர் நற்பணி மன்றம் மக்கள் நலப்பணிகளில் ஈடுபடும் என்றும் தெரிவித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.
தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக தனது ரசிகர் மன்றத்தினை, ரஜினி மக்கள் மன்றமாக மாற்றிய ரஜினி, அரசியல் கட்சியினை தொடங்கி தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் தெரிவித்திருந்த நிலையில், கொரோனா பெருந்தொற்று பரவல் அதிகரித்ததன் காரணமாக தமது உடல்நிலையை கருத்தில் கொண்டு அரசியல் கட்சி தொடங்க போவதில்லை என தெரிவித்திருந்தார். இது ரஜினிகாந்த்தின் ரசிகர்களை அதிகளவு ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியது.

இந்த நிலையில், தனது ரஜினி மக்கள் மன்றத்தினை கலைப்பதாகவும், முன்னர் இயங்கி வந்ததைப்போலவே தனது ரசிகர் நற்பணி மன்றம் மக்கள் நலப்பணிகளில் ஈடுபடுமெனவும் தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்.