தனி கொங்கு நாடு… பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு

அண்மையில், தனி கொங்கு நாடு குறித்து பாஜகவைச் சேர்ந்தவர்கள் கோடிக்கை விடுத்து வருகின்றனர். பாஜகவின் இந்தப் பேச்சுக்குப் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே. பி. முனுசாமி, “ யாரையோ பழி வாங்குவதற்காக ஒரெ நாடாக இருக்கும் மக்களிடம் பிரிவினை வாதத்தைத் தூண்டும் வகையில் பேச வேண்டாம்” என கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர், “கொங்கு நாட்டைத் தனியாகப் பிரிப்பதற்கு நாங்கள் விதை போட வில்லை.
ஆனால், மாநிலத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக இருந்தால் அதனை நிறைவேற்றுவதே அரசின் கடமை” எனக் கூறி சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.