வலிமை அப்டேட்டும்.. வானதி சீனிவாசனும் ; மகிழ்ச்சியில் தல ரசிகர்கள்!

கடந்த 2019 ஆம் ஆண்டு நடிகர் அஜித் நடிப்பில், தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில், வினோத் இயக்கத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் அதே கூட்டணியில் அஜித்தின் அடுத்த திரைப்படம் உருவாகவுள்ளதாக அறிவிப்பு வெளியான நிலையில், கடந்த ஓராண்டு காலமாக அஜித், ரசிகர்கள் தாங்கள் செல்லும் எல்லா இடங்களிலும், காணும் எல்லாரிடமும் வலிமை அப்டேட் குறித்து கேட்டு வந்தனர். விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட எவரும் அஜித் ரசிகர்களிடமிருந்து எவரும் தப்பவில்லை.

அப்படி தனது தேர்தல் பிரச்சார சமயத்தில் வலிமை அப்டேட் கேட்கும் ரசிகர்களிடம் தானும் சிக்கினார் பாஜகவின் முன்னணி தலைவர்களுள் ஒருவரான வானதி சீனிவாசன். அவரிடமும் வலிமை படத்தின் அப்டேட் கேட்டனர் அஜித் ரசிகர்கள். அவர்களிடம் தான் வெற்றிபெற்றால் நிச்சயம் உங்களுக்கு வலிமை படத்தின் அப்டேட் கிடைக்கும் என நகைச்சுவையோடு தெரிவித்திருந்தார் வானதி.
இந்நிலையில், நேற்று வானதி வலிமை அப்டேட் வெளியான நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் நான் வெற்றி பெற்றவுடன் வலிமை அப்டேட் வந்து விட்டது என பகிர்ந்துள்ளார். தீவிர அரசியல் முகமுடையவரான வானதியின் இலகுவான பக்கத்தை பார்த்து மகிழ்ச்சியில் உள்ளனர் அஜித் ரசிகர்கள்.