மு.க ஸ்டாலின் – விஜயகாந்த் நேரில் சந்திப்பு ; காரணம் என்ன?

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் விஜயகாந்த்தை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்துள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில், அதிமுக கூட்டணியிலிருந்த தேமுதிக அங்கு தேர்தலில் போட்டியிட போதிய இடங்கள் வழங்கப்படவில்லை என கூறி, தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துடன் கூட்டணி வைத்து போட்டியிட்டு அனைத்து இடங்களிலும் தோற்றது. அதே சமயம், தேர்தல் தோல்விக்கு பிறகு, முதல்வர் பொறுப்பேற்றிருந்த திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் வாழ்த்து தெரிவித்திருந்தார். அதோடு தாங்கள் ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படுவோமெனவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சென்னையிலுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்துள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின். அப்போது முதல்வரிடம், கொரோனா நிவாரண நிதியாக ரூ.10 லட்சத்தை விஜயகாந்த் வழங்கியுள்ளார்.
முன்னதாக, சட்டசபை தேர்தல் வெற்றிக்கு பின்னர் திமுகவின் இளைஞரணி தலைவர் உதயநிதியும் விஜயகாந்த்தை நேரில் சென்று சந்தித்தது குறிப்பிடத்தக்கது.