உங்கள் தோல்விக்கு கூட்டணியை பழிப்பதா? சண்முகத்தை விளாசிய எஸ்.ஆர் சேகர்!

பாஜக மற்றும் பாமகவுடன் கூட்டணி வைத்ததன் காரணத்தினாலேயே சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தோற்றதாக தெரிவித்திருந்தார் அதிமுகவின் முன்னணி தலைவர்களுள் ஒருவரும், முன்னாள் சட்டத்துறை அமைச்சருமான சி.வி சண்முகம்.
சண்முகத்தின் பாஜகவுடனான கூட்டணி குறித்த கருத்து அரசியல் அரங்கில் பரபரப்பை உண்டாக்கிய நிலையில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் பாஜகவுடனான கூட்டணி தொடர்வதாக அறிக்கை வெளியிட்டு அதிமுக – பாஜக கூட்டணி தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்தனர்.
அதே சமயம், சட்டசபை தோல்விக்கு தங்களை காரணம் காட்டுவதனை ஏற்க முடியாதெனவும், தனது தனிப்பட்ட தோல்விக்கு கூட்டணி மீது பழி சுமத்துவதா எனவும் சி.வி சண்முகத்தை விமர்சித்துள்ளார் பாஜகவின் முன்னணி தலைவர்களுள் ஒருவரான எஸ்.ஆர் சேகர்.
முன்னதாக, நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் சி.வி சண்முகம் விழுப்புரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.