ஜிகா வைரஸ் உறுதி செய்யப்பட்டால்.. பகீர் கிளப்பும் சுகாதாரத்துறை!

கர்ப்பிணி பெண்களுக்கு ஜிகா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டால், பிறக்கும் குழந்தைகளுக்கு உடல் ஊனம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது தமிழக அரசின் பொதுசுகாதாரத்துறை.
கொரோனோ பெருந்தொற்றினை தொடர்ந்து கருப்பு பூஞ்சை தொற்று, ஜிகா வைரஸ் தொற்று என அடுத்தடுத்து தொற்று நோய்கள் பரவி வரக்கூடிய சூழலில், இத்தகைய வைரஸ் தொற்றுகளால் ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்தவும், அதிக பாதிப்புகள் ஏற்படா வண்ணம் தடுக்கவும் ஒன்றிய, மாநில அரசுகள் பல்வேறு வகையிலான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. அரசின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பையும் கோருகின்றன.
இந்த சூழலில், கேரளாவில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு ஜிகா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவருடன் தொடர்பிலிருந்த சுமார் 14 நபர்களுக்கும் ஜிகா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
முன்னதாக, கர்ப்பிணி பெண்களுக்கு ஜிகா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டால், பிறக்கும் குழந்தைகளுக்கு உடல் ஊனம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக பொதுசுகாதாரத்துறை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.