யூனியன் பிரதேசமாகிறதா கொங்கு பகுதி ; என்ன சொல்கிறார் வானதி!

தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பில் அமைந்துள்ள திமுக அரசு, தொடர்ச்சியாக தனது அறிவிப்புகள் மற்றும் ஆவணங்களில் மத்திய அரசை, ஒன்றிய அரசு என்றே குறிப்பிட்டு வருகிறது. இந்திய அரசியலமைப்பில் இல்லாததை – தேசிய இறையாண்மைக்கு எதிரானதை நாங்கள் குறிப்பிடவில்லை. ஒன்றிய அரசு என்ற வார்த்தை பிரயோகம் இந்திய அரசியலமைப்பிலேயே உள்ளது என “ஒன்றிய அரசு” என்ற வார்த்தை பயன்பாடு குறித்து விளக்கமளித்துவருகிறது திமுக அரசு.

அதே சமயம், இவ்வாறான வார்த்தை பிரயோகங்களின் மூலம் திமுக தலைமையிலான அரசு பிரிவினைவாத எண்ணங்களையே வளர்த்திட முயல்கிறது என்ற குற்றச்சாட்டினை தொடர்ந்து முன்வைத்துவருகிறது தமிழக பாஜக.

இந்த நிலையில், சமீபத்தில் ஒன்றிய அரசு அமைச்சரவை விரிவாக்கத்தில் இணையமைச்சர் பொறுப்பேற்ற தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த எல்.முருகன் பற்றிய ஒன்றிய அரசின் சுய விவர குறிப்பில், மாவட்டத்தை குறிப்பிடும் இடத்தில் கொங்குநாடு என குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய அரசை, ஒன்றிய அரசு என குறிப்பிடும் தமிழக அரசை எச்சரிக்கும் வகையில் ‘கொங்குநாடு’ என எல்.முருகன் பற்றிய ஒன்றிய அரசின் சுய விவர குறிப்பில் இடம்பெற்றிருப்பதாகவும், கொங்குநாடு என்ற புதிய யூனியன் பிரதேசம் உருவாக்கப்பட இருப்பதாகவும் பல்வேறு விவாதங்கள் கிளம்பிய நிலையில், தமிழக பாஜக எம்எல்ஏ வானதி தனது முகநூல் பக்கத்தில், கொங்கு பகுதி குறித்த இறையனாரின் சங்கப்பாடல் முதல் கொங்கு பகுதி தனி நாடக திகழ்ந்தததை குறிப்பிடும் பல்வேறு இலக்கியங்களை குறிப்பிட்டுள்ளார்.

இத்தகைய பதிவின் மூலம் என்ன சொல்ல வருகிறார் வானதி என கேள்வியெழுப்பி வருகின்றனர் அரசியல் நோக்கர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவிட்டதாக ராணுவ வீரர் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்.

கிருஷ்ணகிரி அருகே சின்ன அக்ரஹாரம் கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் செந்தில் குமார்…

சத்தியமங்கலம்  மலைப்பகுதியில்  திடீரென்று தரை இறங்கிய ஹெலிகாப்டரால் பரபரப்பு …

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதி உகினியம் மலை கிராமத்தில் இன்று…