புதிய அரசியல் கட்சி தொடங்கினார் ஒய்எஸ்ஆர் ஷர்மிளா!

தெலுங்கானா மாநிலத்தில் புதிய அரசியல் கட்சியினை துவங்கியுள்ளார் ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஒய்எஸ் ராஜசேகர ரெட்டியின் மகளும், தற்போதைய ஆந்திர மாநிலத்தின் முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கையுமான ஒய்எஸ்ஆர் ஷர்மிளா.

ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் முதல்வராகவும், காங்கிரஸ் கட்சியின் வலுவான பிராந்திய தலைவர்களுள் ஒருவராகவும் அறியப்பட்டவர் ஒய்எஸ்ஆர் ராஜசேகர ரெட்டி. கடந்த 2009 ஆம் ஆண்டு விமான விபத்து ஒன்றில் அவர் மரணடைந்தார். அதன் பிறகு, அவரது மகன் ஜெகன் மோகன் ரெட்டி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினை தொடங்கி கடந்த 2019 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில் ஆட்சியை பிடித்தார்.

இந்நிலையில், தற்போது ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கை ஷர்மிளா தெலுங்கானா மாநிலத்தில், ஓஎஸ்ஆர் தெலுங்கானா என்ற புதிய அரசியல் கட்சியினை தொடங்கியுள்ளார். தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ் தாம் அளித்த வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றவில்லை எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

முன்னதாக, ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தை ஆந்திரா, தெலுங்கானா என பிரிக்க ஜெகன் மோகன் ரெட்டி கடுமையான எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *