நாளை பிரதமரை சந்திக்கும் தமிழக ஆளுநர்!
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நாளை டெல்லி சென்று மாலை 4 மணி அளவில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் நிறைவடைந்து திமுக தலைமையில் புதிய ஆட்சி உருவானதற்குப் பின் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் முதன் முறையாக டெல்லி செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பயணத்தின்போது, ராஜீவ் கொலையாளிகள் எழுவர் விடுதலை குறித்தும், நீட்தேர்வு குறித்தும் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், நாளை மறுநாள் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.