மேகதாது அணை கட்டுவதை தடுக்க வேண்டும்… விஜயகாந்த் வேண்டுகோள்!

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதை தடுக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், மேகதாதுவில் அணை கட்டாமல் தடுக்க தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழக மக்களின் நலன் கருதி மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவுக்கு மத்திய அரசு அனுமதி தரக்கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.