முதலமைச்சரின் அவசர லண்டன் மருத்துவ பயணம்

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உடல் நிலை பரிசோதனைக்காக லண்டனில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்குச் சென்று வருவது வழக்கம்.

2020 ஆம் ஆண்டே லண்டன் செல்ல வேண்டிய நேரத்தில், கொரோனா ஊரடங்கு ஏற்பட்டதால் அவரின் லண்டன் மருத்துவமனை பயணம் தடைபட்டது. அடுத்து, தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பணிகள் வந்து விட்டதால் அவரால் லண்டன் செல்ல முடியவில்லை.

இதனையடுத்து, தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள ஸ்டாலின், மருத்துவர்களின் ஆலோசனைப்படி தொடர் உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

சென்ற ஆண்டு லண்டன் செல்லமுடியாமல் போனதைத் தொடர்ந்து இந்த ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி முதலமைச்சர் லண்டன் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக செல்ல உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே, ஜூலை 3 ஆம் தேதி சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஸ்டாலினுக்கு பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் லண்டன் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மருத்துவர்களின் ஆலோசனைப்படி, முதலமைச்சர் லண்டன் சென்று வந்த பிறகு தான் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என சொல்லப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவிட்டதாக ராணுவ வீரர் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்.

கிருஷ்ணகிரி அருகே சின்ன அக்ரஹாரம் கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் செந்தில் குமார்…

சத்தியமங்கலம்  மலைப்பகுதியில்  திடீரென்று தரை இறங்கிய ஹெலிகாப்டரால் பரபரப்பு …

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதி உகினியம் மலை கிராமத்தில் இன்று…